குளித்தலை: திம்மாச்சிபுரத்தில், திருவாடுதுறை ஆதீனம் திருச்சிற்றம்பலம் தம்பிரான் வந்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, திம்மாச்சிபுரத்தில் திருவாடுதுறை ஆதீனம் திருச்சிற்றம்பலம் தம்பிரான் கோவைக்கு செல்லும் வழியில் திம்மாச்சிபுரத்தில் சிவனடியார் காந்தி இல்லத்தில் பங்கேற்றார். அப்போது, சிவனடியார்களுக்கு ஆசி வழங்கினார். இதில் கரூர் மாவட்ட சிவசேனா தலைவர் கஸ்தூரிரங்கன், சிவனடியார்கள், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.