சென்னை: சேலையூர் மகாலட்சுமி நகரிலுள்ள சென்னை ஓம் ஸ்ரீ கந்தாஸ்ரமத்தில், இன்று முதல் 17ம் தேதி வரை பத்தாம் ஆண்டு வசந்த நவராத்திரி விழா நடைபெறுகிறது.
விழாவில், ஒன்பது நாட்களும் பிரத்தியங்கிராதேவி மூலமந்திர மங்கள சண்டி மகா யக்ஞமும், பிரத்தியங்கிரா தேவியின் ஒவ்வொரு உருவத்திற்கும் தினசரி காலை மற்றும் மாலை வேளையில் ஹோமங்களும், சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனையும், இரவு, 8:00 மணிக்கு ஸ்ரீசக்கர பூர்ண மகாமேருவுக்கு ஹோம கலசாபிஷேகமும் நடைபெறுகின்றன.