திருக்கோவிலுார் கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் யுகாதி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2016 01:04
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் யுகாதி விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு மூலவர் கன்னிகாபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 9:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் கன்னிகாபரமேஸ்வரி அம்மன், மயில் தோகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சோடசோபவுபச்சார தீபாராதனை, 8:00 மணிக்கு பஞ்சாங்கம் வாசிக்கப் பட்டது. இரவு 9.00 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆர்யவைசிய சமூகம், யுகாதி குழு, வாசவி, வனிதா கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.