பதிவு செய்த நாள்
11
ஏப்
2016
01:04
திருக்கனுார்:கூனிச்சம்பட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில், லட்ச தீப ஆராதனை, வரும் 14ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி, திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 28ம் ஆண்டு லட்ச தீப ஆராதனை, வரும் 14ம் தேதி நடக்கிறது.
அன்று காலை 6:00 மணிக்கு, அபிஷேக ஆராதனையும், மாலை 5:00 மணிக்கு, சந்தனக் காப்பு
அலங்காரமும், லட்ச தீப பூஜையும், மாலை 6:00 மணிக்கு, பஜனை கோஷத்துடன் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர், கிராம மக்கள் செய்துள்ளனர்.