Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளூர் ஆழியங்கை பெருமாள் கோயில் ... 600 ஆண்டு பழமை வாய்ந்த ராமர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உமரிக்காடு முத்தாரம்மன் கோயிலில் கொடை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2011
11:08

ஏரல் : உமரிக்காடு முத்தாரம்மன் கோயில் கொடை விழா இன்று நடக்கிறது. ஏரல் அருகேயுள்ள முத்தாரம்மன் கோயிலின் இந்த ஆண்டு கொடை விழா நிகழ்ச்சிகள் கடந்த 26ம் தேதி முதல் ஆரம்பமானது. 26, 27ம் தேதிகளில் அம்மனுக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. 28ம் தேதி இரவு தீபாராதனை மற்றும் நகைச்சுவை இன்னிசை, பட்டிமன்றம் நடந்தது. நேற்று காலை, மதியம் அன்னதானம், இரவு 7 மணிக்கு மாக்காப்பு, தீபாராதனை நடந்தது. இன்று அம்மனுக்கு கொடை விழா நடக்கிறது. காலை 5 மணிக்கு அம்மன் அபிஷேகத்திற்கு தாமிரபரணி கடல் சங்கு முகம் சென்று புண்ணிய தீர்த்தம் கொண்டு வருதல், 7 மணிக்கு தீபாராதனை, அன்னதானம், மாலை 5 மணிக்கு அம்மன் அபிஷேகத்திற்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து புண்ணிய தீர்த்தம் கொண்டு வருதல், 6 மணிக்கு சிங்காரி மேளம், இரவு 7 மணிக்கு தீபாராதனை, அன்னதானம், நவீன வில்லிசை, கரகாட்டம், இரவு 12 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து ஸ்ரீமன் நாராயண சுவாமிக்கு பொங்கலிடுதல், இரவு 1 மணிக்கு பார் விளையாட்டு நடக்கிறது. அதைத் தொடர்ந்து மாவிளக்கு, கயிறு சுற்றி ஆடுதல், ஆயிரம் கண்பானை, முளைப்பாரி எடுத்தல், நேமிசம் கொண்டு வருதல், இரவு 2 மணிக்கு அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி ஊர் வீதிகளில் பவனி வந்து அருள் புரிதல், வாண வேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள்பால் பொங்கலிடுதல், 10 மணிக்கு ஊர்மக்கள் பொங்கலிடுதல், மதியம் தீபாராதனை நடக்கிறது. செப்.1ம் தேதி இரவு 8 மணிக்கு சென்னை வாழ் உமரி மாநகர் நாடார் நலச்சங்கம் சார்பில் சென்னை கலைஞர்கள் வழங்கும் புதிய பூமியின் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. கொடை விழா ஏற்பாடுகளை கிராம விவசாயிகள் சங்க தலைவர் கந்தப்பழம் தலைமையில் நிர்வாகஸ்தர்கள் பிரபாகரன், கிருஷ்ணன், சிங்கராஜ், கணேசன் ஆகியோர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி; வட இந்தியாவில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில் துலா ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் அம்மனுக்கு சிறப்பாக நடைபெற்ற சண்டி யாகம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி தேர் திருவிழாவுக்கு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar