பதிவு செய்த நாள்
12
ஏப்
2016
12:04
சென்னை: சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில், சித்திரை மாத பெருவிழா, இன்று
கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான விழா, இன்று (12ம் தேதி) அதிகாலை, 4:30 முதல் 6:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 14ம் தேதி, அதிகாலை, 5:45 மணிக்கு அதிகாரநந்தி சேவையும், 16ம் தேதி, இரவு 12:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகன சேவையும், 18ம் தேதி, அதிகாலை 5:00 முதல் 6:00 மணிக்குள் தேரோட்டமும் நடக்கின்றன. வரும், 19ம் தேதி, மாலை 6:00 மணிக்கு அறுபத்து மூவர் வீதியுலா நடக்கிறது. 21ம் தேதி, இரவு 7:00 மணி முதல் 8:30 மணிக்குள் திருக்கல்யாண வைபவமும், 22ம் தேதி, இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு சேவையும் நடக்கின்றன. விழாவின் கடைசி நாளான, 23ம் தேதி, சிறப்பு நவகலச அபிஷேம், மாலை 5:00 மணிக்கு, வெள்ளை யானை மீது, திருமுறை வீதி உலா நடக்கிறது.