பேரையூர்: பேரையூரிலுள்ள காளியம்மன்,மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. விழா மார்ச் 20 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒரு வாரமாக தினமும் இரவு அம்மன் வீதிவுலா வந்து அருள்பாலித்தார். பக்தர்கள் விரதமிருந்து நேற்று அக்னி சட்டி எடுத்தனர். பொங்கல் திருவிழா நாளில் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பொங்கல் வைத்தனர்.