மேலுார்: மேலுார் அருகே தெற்குத்தெரு மந்தைகருப்பண்ண சுவாமி கோயிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி ஏப்., 9ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின. நான்கு கால யாகசாலை பூஜைகள் முடிந்த நிலையில், நேற்று காலை சிவாச்சாரியார்கள் தட்சிணாமூர்த்தி, ராஜா கும்பத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. 34 ஆண்டுக்கு பிறகு நடந்த கும்பாபிஷேகத்தில் மேலுார், தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி உட்பட சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்றனர்.