பதிவு செய்த நாள்
12
ஏப்
2016
12:04
வால்பாறை: ஷேக்கல்முடி எஸ்டேட் சிவன்விசாலாட்சி கோவிலில், மகாகும்பாபிஷேக விழா நடந்தது.
வால்பாறை அடுத்துள்ளது ஷேக்கல்முடி எஸ்டேட். இங்குள்ள சிவன்விசாலாட்சி கோவிலின், 42ம் ஆண்டு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் பல்வேறு கோவில்களிலிருந்து தீர்த்தம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் இரவு அஷ்டபந்தன ேஹாமம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு யாகபூஜைக்கு பின், புனித தீர்த்தம் கோவிலை வந்த பின், காலை, 7:30 மணிக்கு கலசத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. காலை, 10:00
மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் எஸ்டேட் பொதுநிலை மேலாளர்
பிரவின்குமார், உதவிமேலாளர் அறிவழகன், மருத்துவ அதிகாரி சுனில், கண்காணிப்பாளர்
மதன்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்
நிர்வாகிகள் செய்திருந்தனர்.