பதிவு செய்த நாள்
13
ஏப்
2016
11:04
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் புன்னைநல்லுார் மாரியம்மனுக்கு, பக்தர்கள் நேற்று, 1,400 பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.தஞ்சாவூர் புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில் பிராமணாள் கைங்கர்ய டிரஸ்ட் சார்பில், நேற்று காலை, 1,400 பால்குடங்களுடன், சிவகங்கை பூங்காவில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. மதியம் 12:00 மணிக்கு, கோவிலுக்கு பால்குடங்கள் வந்ததும், அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு, 7:00 மணிக்கு, கோவில் உள்ளே அம்பாள் புறப்பாடு வெகு சிறப்பாக நடந்தது.