பதிவு செய்த நாள்
13
ஏப்
2016
05:04
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு, அம்பாள் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழியில், தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவிலில் உள்ளது. இங்கு சுவாமி குரு, லிங்கங சங்கமம் என்று மூன்று எழுந்தருளி காட்சியளிக்கிறார். சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தருக்கு, அம்பாள் இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் ஞானப்பால் வழங்கினார். இதனால் ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர் தனது 3 வது வயதில் தேவாரத்தின் முதல் பாடலான தோடுடைய சிவனே என்ற பாடலை பாடினார். இதனை போற்றும் வகையில் ஆண்டுதோறும் இந்தகோயிலில் திருமுலைப்பால் விழா நடத்தப்படுவது வழக்கம். இவ்வாண்டு திருமுலைப்பால் விழா நேற்று மதியம் தருமை ஆதினம் 26 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிகஞானசம்பந்த பரமாச்சா ரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. விழாவை முன்னிட்டு காலை தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள திருஞானசம்பந்த பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஓதுவார்கள் தேவாரம்பாட திருஞானசம்பந்தர் பல்லக்கில் பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளினார். மதியம் 2:15மணிக்கு தருமை ஆதினம் முன்னிலையில் உமையம்மை புஷ்ப பல்லக்கில் வந்து பிரம்ம தீர்த்த கரையில் எழந்தருளி திருஞானசம்பந்தருக்கு தங்க கின்னத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து சுவாமி, அம்பாள் ரிஷபவாகனத்தில் பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளி திருஞானசசம்பந்தருக்கு காட்சியளித்தனர். அப்போது சுவாமி,அம்பாள், திருஞானசசம்பந்தருக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பலா, வாழை,பேரிட்சை பழங்களுடன், சர்க்கரை கலந்த பாலை சுவாமி, அம்பாளுக்கு நைய் வேத்தியம் செய்து குழந்தைகள் ஞானம் பெற பிரார்த்தனை செய்தனர். முன்னதாக திருமுலைப்பால் விழாவை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மௌனமடம் ஸ்ரீமத் மௌன குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் ஞானப்பால் உண்டது என்ற தலைப்பிலும், திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமி கள் பொற்றாளம் பெற்றதுமுதல் விடம் தீர்த்ததுவரை என்ற தலைப்பிலும், தருமபுரம் ஆதின கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு ஆலவாய் அற்புதங்கள் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். விழாவை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி, கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.