பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
10:04
தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த சுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரைப் பெருவிழா மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று, படி பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் அறுபடை வீடுகளில், 4ம் படை வீடாக திகழ்கிறது.இக்கோவிலில், சித்திரைப் பெருவிழா படி பூஜையுடன் விழா துவங்கி, வரும், 25ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு கோவிலில் உள்ள, 60 படிகளுக்கும் பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜை செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், வரும், 23ம் தேதி நடைபெற உள்ளது. அத்துடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால் காவடி எடுத்து வந்து, முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.