பதிவு செய்த நாள்
19
ஏப்
2016
12:04
உத்திரமேரூர்: சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று கருடசேவை கோலாகலமாக நடைபெற்றது. உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று காலை, 6.00 மணிக்கு, சுந்தர வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து, பக்தர்களுக்கு கோபுர தரிசனம் அளித்தார்; அங்கு, சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடந்தன. அதைத் தொடர்ந்து, காலை, 7.00 மணிக்கு, மலரால் அலங்கரிக்கப்பட்ட சுந்தர வரதராஜ பெருமாள் ஊர்வலமாக புறப்பட்டார். சுவாமியுடன் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடிய படி சென்றனர். உத்திரமேரூர் பகுதி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து, காலை, 9:30 மணிக்கு கோவில் வந்தடைந்தார். இவ்விழாவில், உத்திரமேரூர் மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த, பக்தர்கள் கலந்து கொண்டனர்.