கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2016 12:04
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. பிரசித்த பெற்ற கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு நேற்று முன்தினம் முகூர்த்தகால் ஊன்றுதல் நடைபெற்றது. நேற்று மாலை சாட்டுதல் செய்யப்பட்டது. நாளை மாலை அலங்கரிக்கப்பட்ட கொடிக் கம்பம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெறும். அதற்கு முன்னதாக கம்பராயப் பெருமாள் கோயிலில் இருந்து ஐம்பொன்னாள் ஆன உற்சவர் அழைக்கப்பட்டு வந்து, கவுமாரியம்மன் கோயிலில் எழுந்தருள்வார். நாளை முதல் 22 நாட்கள் சித்திரை திருவிழாவில் தினமும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி, அம்மன் எழுந்தருளல் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம்கண்பானை எடுத்தல், உருண்டு கொடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்கள் பக்தர்களால் செலுத்தப்படும். கோயில் முன்பாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டி, இந்துசமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.