பதிவு செய்த நாள்
19
ஏப்
2016
12:04
செங்கல்பட்டு: திருக்கச்சூரில், தியாகராஜ சுவாமி கோவிலில், தேரோட்டம், கோலகாலமாக நேற்று நடைபெற்றது. சிங்கபெருமாள்கோவில் அடுத்த, திருக்கச்சூர் கிராமத்தில், அஞ்சலாட்சி உடனுறை அமிர்த தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது. இங்கு, 12ம் தேதி, பிரம்மோற்ச விழா துவங்கி, 22ம் தேதி வரை விழா, நடைபெறுகிறது. முக்கிய விழாவான தேரோட்டம், நேற்று நடைபெற்றது. காலை, 9:00 மணிக்கு, தேரில், சந்திரசேகர் சுவாமி எழுந்தருளினார்; பக்தர்கள் நீண்ட வரிசையிலிருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர். அதன் பின், காலை, 9:15 மணிக்கு, தேரோட்டம் துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, பகல், 1:00 மணிக்கு,நிலைக்கு வந்தது.வண்டலூர் காவல் துணை கண்காணிப் பாளர் முகிலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.