பதிவு செய்த நாள்
19
ஏப்
2016
12:04
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், விடையாற்றி உற்சவம், வரும், 23ம் தேதி முதல், 25ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, உற்சவர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 10 நாள் பிரம்மோற்சவம், வரும், 22ம் தேதி நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து, விடையாற்றி திருவிழா, மறுநாள், 23ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.