பதிவு செய்த நாள்
31
ஆக
2011
11:08
உடுமலை : உடுமலை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான கண்டியம்மன் கோவில் பராமரிப்பின்றி பொலிவு இழந்துள்ளன; நடன மண்டபம் மண் ணுக்குள் புதையுண்டு வருகிறது.உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கண்டி யம்மன் கோவில் உள்ளது. இரண்டு கோபுரங்களை கொண்ட இக்கோவிலில், மூன்று கருவறைகள் உள்ளன. இதில், இரண்டு கருவறைகளில் ஒரே அம்மன் காட்சியளிக்கிறார்.கோவிலில், நடன மற்றும் முன் மண்டபம், சுற்றுச்சுவரில் பழங்கால வாழ்க்கை நடைமுறைகளை வெளிப்படுத்தும் சிற்பங்கள், போர்முறைகள், அப்போது வாழ்ந்த பல அரிய வகை விலங்குகளின் சிற்பங்கள் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.காலப்போக்கில், கோவில் கட்டடங்கள் முறையான பராமரிப்பில் இல்லாததால், சிதிலம் அடைந்துள்ளன. குடிமங்கலம் ஒன்றியத்திலேயே பெரிய கோவிலாக உள்ள இக்கோவில், தற்போது பொலிவிழந்துள்ளது.அழகிய கட்டட கலையை வெளிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு தூண்களிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டு, காட்சியளித்த நடன மண்டபத்தில் பல்வேறு விழாக்களும், கலை நிகழ்ச்சிகளும் நடந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இம்மண்டபம் போதிய பராமரிப்பின்றி, மேல்தளம் கீழே விழுந்து சிதிலம் அடைந்துள்ளது. பெரிய மண்டபமாக இருந்த நடன மண்டபம் தற்போது மண்ணுக்குள் புதையுண்டு வருகிறது. கோவிலின் முன்மண்டபம் மற்றும் சுற்றுப்பிரகார சுவர்களில், செதுக்கப்பட்ட சிற்பங்களும் தற்போது சிதிலமடைந்து வருகின்றன.அப்பகுதி மக்கள் கூறியதாவது:கோவிலுக்கு சொந்தமான நிலங்களும், கோவில் வளாகத்தை ஒட்டியுள்ள பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட் டுள்ளன. சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது, என்றனர்.