பதிவு செய்த நாள்
23
ஏப்
2016
12:04
ஆர்.கே.பேட்டை : சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரம், சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6:00 மணிக்கு, உற்சவர் பெருமாள், அம்ச வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினார்.வரும் 30ம் தேதி வரை நடைபெறும் உற்சவத்தில் சிம்மம், அனுமந்த வாகனம், யானை, சூரிய, சந்திர பிரபை என, தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். வரும் 26ம் தேதி கருட வாகனத்தில் எழுந்தருளும் சுவாமி, 29ம் தேதி, தேரில் உலா வருகிறார். 30ம் தேதி, சக்கரஸ்தானத்துடன் விழா நிறைவு பெறுகிறது.