பதிவு செய்த நாள்
23
ஏப்
2016
12:04
வேலூர்: சித்ரா பவுர்ணமியையொட்டி, வேலூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில், புஷ்ப பல்லக்கு ஊர்வலம் ஆண்டுதோறும் நடக்கும். அதன்படி, இந்தாண்டு புஷ்ப பல்லக்கு ஊர்வலம், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12.30 மணிக்கு துவங்கியது. இதற்காக ஜலகண்டேஸ்வரர் கோவில் புஷ்ப பல்லக்கு, வேலூர் அரிசி மண்டி புஷ்ப பல்லக்கு, சேண்பாக்கம் செல்வவினாயகர் கோவில், வெல்ல மண்டி சார்பில், தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோவில், வாணியர் தெரு சார்பில், கனக துர்கையம்மன் புஷ்ப பல்லக்கு, வேலூர் ஆனைகுளத்தம்மன் கோவில், வேலூர் அரசமரப்பேட்டை லட்சுமி நாராயணா பஷ்ப பல்லக்கு ஆகிய, பல்லக்குகள் ஊர்வலமாக சென்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கிய ஊர்வலம், வேலூர் கிருபானந்த வாரியார் சாலை, கோட்டை மைதானம் வழியாக ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக சென்று நேற்று காலை, 8 மணிக்கு முடிவடைந்தது. அப்போது, புஷ்ப பல்லக்குகள் அலங்கார மின் விளக்குகளால் ஜொலித்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.