Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் ... ஆதிசங்கரரின் அவதார தலமான காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம்! ஆதிசங்கரரின் அவதார தலமான காலடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏப்.24: புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்
எழுத்தின் அளவு:
ஏப்.24: புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2016
02:04

அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தி தினம் ஏப்.24. பக்தர்களுக்கு  அவரது அறிவுரைகள் ..

*மனிதர்களுக்கு பதினாறில் இருந்து முப்பது வயது வரையில் உள்ள காலகட்டம் மிகவும் முக்கியமானது. இந்த வயதில் கடுமையாக உழைத்துப்போராடி, லட்சியத்தை அடைய வேண்டும்.
*நாடு, மொழி, இனம், பொருளாதார நிலை இவற்றிற்கு தீங்கு நேரும் வகையில், எந்த சூழ்நிலையிலும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடாதீர்கள்.
*அறிவின் உச்சகட்டமே அன்பு; கல்வியின் உச்சநிலை நல்ல குணாதிசயம் ஆகும்
*மாணவர்களுக்கு நல்ல குணங்களைக் கற்றுத்தருவதும், தகுதியானவராக மாற்றித் தருவதுமே கல்வி கற்பித்தலின் அடிப்படை ஆகும்
*மனிதர்கள், பக்தியின் ஒரு அங்கமாகத்தான் இருக்க வேண்டும். எந்த செயலையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுத்த வேண்டும்.
*உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து, பொழுது போக்குகளில் காலத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. அதைக் கொண்டு பிறருக்கு சேவை செய்யுங்கள்.
*கடவுளே இந்த வாழ்க்கையைக் கொடுத்தவர். அவரே வாழ்க்கையின் பாதுகாவலராகவும், லட்சியமாகவும் இருக்கிறார்
*உங்களது செயல்பாடுகள், பக்திப்பூர்வமானதாகவும், பழத்தின் உள்ளிருக்கும் சதையை எடுத்து சாப்பிடுவதைப் போல பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்
*‘நான் பயமில்லாதவன்’, ‘நானே கடவுள்’ என்று சொல்லிக்கொண்டே இருங்கள். நிச்சயம் நீங்கள் யாராலும் வெல்ல முடியாதவராக வலிமை பெறுவீர்கள்
*குழந்தைகள் தவறு செய்யும்போது மிகவும் கண்டிப்பு காட்டுங்கள். அவர்கள் நற்செயல் செய்யும்போது, வாய்விட்டு புகழ்ந்து பேசுங்கள். அதுவே அவர்கள் எதிர்காலத்தில் நல்ல பாதையில் செல்லும் வழிகாட்டியாக அமையும்
*லட்சியத்தை அடையும் வரையில் துவண்டு போவதும், அதிலிருந்து பின் வாங்குதலும் கூடாது.
*விண்வெளிக்குச் சென்று நிலவிலும் கால் வைத்து விட்டவர்களுக்கு, பக்கத்து வீட்டினருடன் இணக்கமாக இருக்கத் தெரிவதில்லை. அயல்வீட்டாருடன் ஒற்றுமையாய் இருங்கள்.
*கடவுளை அடைவதையே, உங்களது லட்சியமாகக் கொண்டு வாழுங்கள். அவருக்கு வெளியில் விளக்கேற்றி வழிபடுவதை விட, மனதிற்குள் விளக்கேற்றி வழிபடுவதுதான் சிறந்தது.
*உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வரைமுறை வைத்துக்கொள்வது தவறான செயல். இவ்வாறு செய்வது தன் சொந்த பெற்றோரையே அவமரியாதை செய்ததற்குச் சமம்.
*சாப்பிடும் உணவானது, அதற்கான வகைகளை வாங்கியவர், சமைத்தவர் மற்றும் பரிமாறியவர் ஆகியோரின் மனநிலையைப் பொறுத்தே இருக்கும்
*பறவைகள் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், உணவிற்காக தரையிறங்கத்தான் வேண்டும். நீங்களும் எவ்வளவு உயர்ந்தாலும் பணிவுடன் இருங்கள்.
*உணர்வுகளை கட்டுப்படுத்தி செயல்பட்டால் மட்டுமே, மனிதன் மேன்மையான நிலை பெற முடியும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar