சுவாமிசிலை பிரதிஷ்டை செய்யும் போது மருந்து சாத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2016 03:04
எட்டு மூலிகைகள் மற்றும் சில பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது அஷ்டபந்தன மருந்து. சுவாமி சிலை ஆடாமல் நிற்பதற்காக சிலை மற்றும் பீடத்தை இணைத்து சாத்தப்படும் இந்த மருந்து தெய்வீகத் தன்மை மிக்கது. கும்பாபிஷேகத்தில் மருந்து சாத்துதல் முக்கியமானது. இதில் குறை நேர்ந்தால் எவ்வளவு செலவு செய்து கும்பாபிஷேகம் செய்தாலும் பலனில்லை. மேலும் சாத்திய மருந்து ஜீரணமானால் நாட்டுக்கும், மக்களுக்கும் தீங்கு ஏற்படும். அதைக் கண்டறிந்து உடனடியாக நாள், நட்சத்திரம் கூட பார்க்காமல், புதுமருந்நு சாத்தி கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என ஆகமம் கூறுகிறது.