Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி விழா! யானைகள் கொண்டாடிய விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம் : மெகா சைஸ் கொழுக்கட்டை படையல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 செப்
2011
10:09

திருப்பத்தூர் : பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், சதுர்த்தியை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம், "மெகா சைஸ் கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நடந்தது. இங்கு, ஆக.,23 ல் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் புறப்பாடு நடந்தது. தீர்த்தவாரி: பத்தாம் நாள் விழாவான நேற்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. விநாயகர் தங்க கவசத்தில் காட்சி அளித்தார். உற்சவர் தங்கமூஷிக வாகனம், பல்லக்கில் சண்டிகேஸ்வரர் கோயிலை வலம் வந்து, ஊரணியில் எழுந்தருளினர். குளத்தில், கூர்ஜம், அங்குச தேவருக்கு, சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் அபிஷேகம் செய்தார். பகல் 12.30 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது.18 படி அரிசியால் தயாரிக்கப்பட்ட முக்குறுணி மோதகம் எனப்படும்"மெகா சைஸ் கொழுக்கட்டை படையல் நடந்தது.இரவு, வெள்ளி ரிஷப, தங்க மூஷிக வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.

பாதுகாப்பு: பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. பன்னீர்செல்வம் எஸ்.பி., தலைமையில், கூடுதல் எஸ்.பி., கண்ணன் உட்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் அறங்காவலர்கள் தேவகோட்டை ராமநாதன் செட்டியார், அமராவதிபுதூர் சிதம்பரம் செட்டியார் ஏற்பாட்டை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர்  கோவிலில் நடந்த சித்திரை பெருவிழா கொடியேற்றத்தில் திரளான ... மேலும்
 
temple news
பிரான்மலை; பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே பன்னீர்மடையில் பாலமுருகன் திருக்கோவில் மற்றும் நவகிரகங்களுக்கு மகா ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar