பெ.நா.பாளையம்: கணுவாய் அருகே சோமையனுாரில் மழை வேண்டி, 108 பால் குட ஊர்வலம் நடந்தது. நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சோமையனுாரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மழை வேண்டியும், உலக மக்கள் அனைத்து வகையான சுபிட்சங்கள் பெறவும், 108 பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். தடாகம் ரோட்டில் உள்ள குண்டு பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, மாரியம்மன் கோவிலை அடைந்தது. இதே போல, நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் மழை வேண்டி பால் குட ஊர்வலம், சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.