பண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி வரும் 29ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது. கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. 19ம் தேதி பாஞ்சாலன் கட்டுண்ட உற்சவம், 20ம் தேதி அரக்குமாளிகை உற்சவம், 21ம் தேதி பக்காசூரன் உற்சவம், 22ம் தேதி திருக்கல்யாணம், 23ம் தேதி பாண்டவர் வனம் புகுதல், 24ம் தேதி அர்ச்சுனன் தபசு உற்சவமும், 25ம் தேதி மாடுபிடி சண்டை உற்சவமும் நடந்தது. தொடர்ந்து இன்று (26ம் தேதி) அரவான் கடப்பலி, வெள்ளை யானை உற்சவம், நாளை (27ம் தேதி) கர்ணமோட்சம் இரவு 7:00 மணிக்கும் உற்சவம் நடக்கிறது. உற்சவர் பெருமாள் கருடவாகனத்திலும், உற்சவர் அர்ச்சுனன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 28ம் தேதி சக்கரவர்த்தி கோட்டை உற்சவம் மாலை 5:00 மணிக்கும், 29ம் தேதி மாலை 5:00 மணிக்கு தீமிதி திருவிழாவும், 30ம்தேதி மஞ்சள் நீர் பட்டாபிஷேகமும், வரும் 6ம் தேதி நிறைமணி உற்சவமும் நடக்கிறது.