பதிவு செய்த நாள்
26
ஏப்
2016
12:04
கோத்தகிரி: கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மன் கேரள ரதத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழா, 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நாள்தோறும் பல உபயதாரர்களின் பூஜைகள், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. விழாவின் ஒருகட்டமாக, மலையாள சமாஜம் சார்பில் நடந்த உபயத்தில், அம்மன் கேரள ரதத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். இதை தொடர்ந்து, டானிங்டன் பகுதியில் இருந்து, பஞ்சவாத்தியம், தாலப்பொலி, சிங்காரி மேளம், செண்டை மேளம், திருக்காவடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலம் கோவிலை அடைந்தது. இந்த, அசுரனை வதை செய்யும் தெய்வ உருவங்களின், தத்ரூப காட்சி, பக்தர்களை பரவசப்படுத்தியது. இரவில், கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.