கோயிலில் வலம் வரும் போது செய்ய வேண்டிய பிரார்த்தனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2016 05:04
கோயில் பிரகாரத்தை மூன்றுமுறை வலம் வருவது வழக்கம். ஒவ்வொரு முறை சுற்றும் போதும் ஒவ்வொரு பிரார்த்தனையை செய்ய வேண்டும். முதல் சுற்றில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவம் அனைத்தையும் போக்கி அருள்புரியும்படி பிரார்த்திக்க வேண்டும். இரண்டாம் சுற்றில் சுவாமியை வழிபடுவதற்குரிய தகுதியை அருளும்படி வேண்ட வேண்டும். மூன்றாம் சுற்றில், நமது விருப்பங்களை நிறைவேற்றி வைக்க விண்ணப்பிக்க வேண்டும். அப்போது சுயநலமின்றி, கடவுளே! உலகிலுள்ள எல்லாரையும் நன்றாக வாழச் செய்! என்று மனதார பிரார்த்திக்க வேண்டும்.