ஈரோடு: ஈரோடு மண்டபம் வீதியை அடுத்துள்ள உப்பு கிணறு சந்து பகுதி, குண்டத்து பத்திரகாளியம்மன் கோயிலில் குண்டம் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பலர் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவை ஒட்டி, வெண்ணை காப்பு அலங்காரத்தில் குண்டத்து பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.