பதிவு செய்த நாள்
27
ஏப்
2016
11:04
நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், மூன்று மாதங்களில், 36.41 லட்சம் ரூபாய், 13 கிராம் தங்கம், 305 கிராம் வெள்ளி நகையை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமியை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். அப்போது, கோவில் உண்டியலில் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்துவர். அவ்வாறு செலுத்தும் காணிக்கையை, குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை எண்ணி, அந்த தொகை, இந்து சமய அறநிலையத்துறை கணக்கில் செலுத்தப்படும். நேற்று, பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி, கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது. அதில், 36 லட்சத்து, 41 ஆயிரத்து, 347 ரூபாய், 13 கிராம் தங்கம், 305 கிராம் வெள்ளி நகையை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கடைசியாக, ஜனவரி, 22ம் தேதி உண்டியல் திறந்து எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.