மதுரை என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மீனாட்சிஅம்மன் கோயில் அதையும் தாண்டினால் அழகர்கோயில் அதையும் தாண்டி மதுரைக்கு புகழ்சேர்க்கும் கோயில் பாண்டி முனீஸ்வரர் கோயில். பாண்டியமன்னன் நெடுஞ்செழியன் இங்கே முனியாக மாறி நின்றுவிட்டதாகவும் அங்கேயே தமக்கு கோயில் அமைத்து மக்களை காக்க வகைசெய்ய வேண்டும் என்று கோரியது.அதே இடத்தில் கோயில் அமைக்கப்பட்டு இன்றளவும் மதுரை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மாவட்டங்களான திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் இருந்து கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்துகொண்டே இருக்கிறது.தங்கள் குலதெய்வம் அறிய முடியாதவர்கள் இவரையே குல தெய்வமாக வணங்குகின்றனர்.எல்லா நாட்களும் இங்கு உள்ள மண்டபங்கள். தங்குமிடங்கள் நிறைந்தே காணப்படுகின்றன. முகூர்த்த நாட்களில் ட்ராபிக் ஜாம் ஆகி விடும் அளவிற்கு இங்கு கூட்டம் கூடும்.
கரூர் அருகே உள்ள நெரூர் கிராமத்தில்பஞ்சம் பிழைப்பதற்காக முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்த வள்ளியம்மை பிழைப்பு தேடி மதுரை மாநேரியில் குடியேறினார். வள்ளியம்மை கனவில் பலமுறை சாமி வந்து, மேலமடை கிராமத்தில் தான் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லியது. ஆனா அந்த அம்மா கனவை பெருசா எடுத்துக்கல. ஆனா கனவு தொடர்ந்து வரவும் கிராம மக்கள்கிட்ட இந்தக் கனவைச் சொல்லியிருக்கார். உடனே வண்டியூர், உத்தங்குடி, கருப்பாயூரணி கிராம மக்களோட மேலமடை மக்களும் சேர்ந்து வள்ளியம்மை கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, உருட்டிய விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்டு வளர்ந்த ஜடாமுடியோடு சம்பணமிட்ட தவக்கோலத்தில் சாமி சிலை கிடைத்தது. அந்த சிலையை வெளியே எடுத்து, ஒரு குடிசை போட்டு சிலையை வைத்து கும்பிடத் தொடங்கினார்கள். ஜடாமுனீஸ்வரர் கோயில் என மக்கள் மத்தியில் பிரபலமானது. வள்ளியம்மை அம்மாதான் பூசாரியாக இருந்தார். அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியாக- நடக்கக்கூட சரிவர பாதையில்லாத காலம். கம்பீரமாக இருக்கிற ஜடாமுனியைப் பார்த்து மக்கள்- குறிப்பாக குழந்தைகள் அச்சப்பட்டதாம். நீண்டு வளர்ந்த ஜடாமுடியைப் பார்த்து சாமியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத் திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டார்கள்.
சிறப்புகள்: ஏற்கனவே கூறியபடி இங்கு பாண்டியமன்னன் நெடுஞ்செழியனே தர்ம முனீஸ்வரராக இருந்து ஆட்சி புரிகிறார் அதுமட்டுமல்லாமல் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மட்டுமல்லாது அந்த வழியாக செல்லும் இறைநம்பிக்கையுள்ள பக்தர்களிடம் அதிக திருவிளையாடல்களை நடத்துவார்.இப்பொழுதும் அதிகம் பேர் இவரை நேரில் பார்த்து இருப்பதாக சொல்கிறார்கள் வயதானவர் வேடத்தில்தான் இவர் அதிகம் தோன்றுவதாக மக்கள் கூறுகின்றனர் துயரங்களோடு வரும் உண்மையான பக்தர்களுக்கு இவர் வெறும் சிலையாக மட்டுமல்லாமல் நேரிலே வந்து பிரச்சினைகளை தீர்த்துவைப்பவர். இந்த கோயிலுக்கு வந்து முழுமனதோடு வழிபட்டு சென்றால் வெற்றிநிச்சயம். இன்றும் கரூரில் இருந்து வந்தவர்களின் வம்சாவழிகளே கோவிலில் பூஜை செய்கின்றனர், இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று உங்கள் மனபாரங்களை கொட்டுங்கள் உங்கள் துயரங்களில் இருந்து உங்களை நிச்சயம் அந்த பாண்டிமுனீஸ்வரர் காப்பார் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து இராமேஸ்வரம்,திருநெல்வேலி செல்லும் பாதையில் இந்த கோயில் உள்ளது. ஆட்டோவில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்றால் 50 ரூபாய் கேட்பார்கள்.