சமாதி என்பதை விட ஸமாதி என்பதே சரி. ஸம என்றால் பக்குவப்படுதல் என்று பொருள். தி என்றால் அறிவு. அதாவது இறைவன் திருவடியைத் தவிர வேறு எதுவுமே நிரந்தரமில்லை என்ற மேலான பக்குவமே ஸமாதி என சித்தாந்தம் கூறுகிறது. துறவிகளும், மகான்களும் இப்படி வாழ்ந்ததை நாம் படித்திருக்கிறோம். அதாவது ஜீவ= வாழ்க்கை. ஸமாதி= பக்குவப்பட்டு வாழ்க்கையிலிருந்து விலகி நிற்றல். மகான்கள் இறந்தால் ஸமாதிஅடைந்தார் என்று கூறுவதும் இதன் அடிப்படையில் தான். உண்மையில் இறப்பதற்கு முன்பே அன்ன ஆகாரமில்லாமல் தவயோக நிலையில் இருந்து இறைவன் திருவடி அடைந்தவர்களையே ஜீவ ஸமாதியடைந்தார் என்று கூற வேண்டும். இவர்களே முனிவர்கள், சித்தர்கள் என போற்றப்படுவர்.