பதிவு செய்த நாள்
05
மே
2016
12:05
பொள்ளாச்சி : பொள்ளாச்சி குஞ்சிபாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் நேற்று திருவிழா நடந்தது. இக்கோவில் திருவிழாவிற்காக, கடந்த மாதம் 19ம் தேதி நோன்பு சாட்டப்பட்டது; 20ம் தேதி நந்தா தீபம் ஏற்றப்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை, 4:00 மணிக்கு பூவோடு எடுத்தல், இரவு, 10:00 மணிக்கு கும்ப ஸ்தாபனம் செய்யப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், 10:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், வழுக்கு மரமேறுதல், உறியடி நடைபெற்றது. இரவு, 7:00 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. விழாவின் நிறைவாக, நாளை காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு, 7:00 மணிக்கு மகா அபிேஷகம், அன்னதானம் நடைபெறும். இத்தகவலை கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.