மதுரை: மதுரை அயிலாங்குடி வராகர்நகர் லட்சுமிவராகர் கோவிலில் வராக ஜெயந்தி விழா நடந்தது. வராகப்பெருமாளுக்கு சங்கல்ப புண்யாக வாசனம், கும்ப ஸ்தாபனம், வேத திவ்ய பிரபந்த பாராயணம், திருமஞ்சனம், அலங்காரம் நடந்தது. சாற்று முறை, தீர்த்த கோஷ்டி, பிரசாதம் அளிக்கப்பட்டது. சின்மயா மிஷன் சிவயோகானந்தா ஆசியுரை நிகழ்த்தினார். அன்னதானம் வழங்கப்பட்டது.