பொள்ளாச்சி: ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் கோவிலில், அட்சய திரிதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி, காலை, 6:00 முதல் 7:30 மணி வரை ஒன்பது வகையான அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாளுக்கு ஐந்து ரூபாய் தங்கநிற நாணயத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.