காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் உதய கருடசேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2016 11:05
காரைக்கால்: காரைக்காலில் அட்சய திருதியை முன்னிட்டு, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் உதய கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், அட்சய திருதியை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 6:00 மணிக்கு நித்ய கல்யாண பெருமாள் உதய கருட சேவையில் எழுந்தருளினார். காரைக்கால் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை நித்ய கல்யாண பக்தஜன சபாவினர் செய்திருந்தனர்.