சபரிமலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் தான் சிறப்பு என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2016 12:05
சபரிமலை யாத்திரை ஒரு நாளில் முடிக்கக் கூடியதல்ல. அதற்கு சில அல்லது பல நாட்கள் தேவை. பால் அல்லது தயிரை சபரிமலை ஐயப்பனுக்குக்கென்று வீட்டிலிருந்தே கொண்டு சென்றால், போய்ச் சேருவதற்குள் அது கெட்டுவிடும். எனவே வீட்டிலிருந்து நெய் எடுத்துச் சென்று பக்தர்கள் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இமயமலையிலுள்ள கேதார், பத்ரி போன்ற திருத்தலங்களில் கடலைப்பருப்பு போன்றவற்றை நிவேதனம் செய்து, பிரசாதமாக பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு எடுத்துச் செல்வது வழக்கம். இதற்குக் காரணம் கடலைப்பருப்பு , உலர்ந்த பழங்கள் போன்றவை கெடாமல் பல நாட்களுக்கு இருக்கும். என்பதுதான். இறைவனுக்கு நைவேத்தியம் செய்த இனிப்பு, பழம் போன்ற பிரசாதங்களைச் சில நாட்கள்தான் வைத்திருக்க முடியும். அவற்றைப் பல நாட்கள் வைத்திருந்தால் தாங்காமல் கெட்டுவிடும்.