பதிவு செய்த நாள்
13
மே
2016
11:05
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி, பாண்டுரங்கன் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவல்லிக்கேணி, வெங்கடாசல செட்டி தெருவில் உள்ள பாண்டுரங்கன் கோவில், நுாறு ஆண்டுகள் பழமையானது. பழுதடைந்திருந்த கோவில், அறநிலைய பாதுகாப்பு இலாகாவின் அனுமதி பெற்று ஜீரணோதாரணம் செய்து, பஞ்சவர்ணம் வைத்து அழகுபடுத்தப்பட்டது. இக்கோவிலில், நேற்று, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை, 6:00 மணிக்கு யாகம், சுப்ரபாதம், கடம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 9:15 மணிக்கு, மிதுன லக்னத்தில் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில்,திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.மாலை, பஜனை சம்பிரதாயப்படி, ருக்மணி கல்யாணம் நடைபெற்றது. இரவு, 7:00 மணிக்கு ஸ்ரீ ருக்மணி பாண்டுரங்கன், பஜனை கோஷ்டியுடன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.