விருத்தாசலம்: வைகாசி பிரம்மோற்சவ மூன்றாம் நாள் உற்சவத்தில், ராஜகோபால சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி யது. மூன்றாம் நாள் உற்சவமாக நேற்று முன்தினம் காலை லட்சுமி நரசிம்மர் அலங்காரத்தில் பல்லக்கில் சுவாமி வீதியுலா, பகல் 11:00 மணிக்கு திரு மஞ்சனம், சேவா காலம், சாத்துமுறை நடந்தன. இரவு அலங்கரித்த கருட வாகனத்தில் ராஜகோபால சுவாமி முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து அருள்பாலித்தார்.