செஞ்சி கோதண்டராமர் கோவிலில் மகா சுதர்சன யாகம், படி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2016 12:05
செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் மகா சுதர்சன யாகம் நடந்தது. செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் மகா சுதர்சன யாகம் மற்றும் 10வது ஆண்டு கோ பூஜை, படி பூஜை நடந்தது. காலை 7 மணிக்கு கோபூஜை மற்றும் படி பூஜை நடந்தது. 9 மணிக்கு சுதர்சன யாகமும் 12 மணிக்கு மகா பூர்ணா ஹுதியும் நடந்தது. மதியம் 1 மணிக்கு அன்னதானமும், 5 மணிக்கு ராமபிரானுக்கு திருமஞ்சனமும் நடந்தது. அறக்கட்டளை நிர்வாகி துரை ரங்கராமானுஜம் தலைமை தாங்கினார். விழாவில் இராஜா தேசிங்கு கல்வி நிறுவன சேர்மன் பாபு, செயலாளர் ராமச்சந்திரன், விழா குழு கணேசன், ராஜேந்திரன், வழக்கறிஞர் ஆத்மலிங்கம், குறிஞ்சிவளவன், செல்வராஜ், அய்யப்பன், ஜானகிராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.