பதிவு செய்த நாள்
28
மே
2016
02:05
திருப்பதி மலையில் ஆகாசகங்கை, பாண்டு, பாபவிநாசம், சுவாமிபுஷ்கரணி, குமாரதாரை, தும்புரு, கிருஷ்ணா ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. உலகி லுள்ள எல்லா புண்ணிய தீர்த்தங்களும் ஆண்டுக்கு ஒரு முறை இத்தீர்த்தங்களில் கலப்பதாக ஐதீகம்.
*சித்திரை மாதம் பவுர்ணமியில் ஆகாசகங்கையில் தீர்த்தங்கள் கலக்கின்றன. அந்நாளில் நீராடினால் வளமிக்க வாழ்வும், மோட்சகதியும் உண்டாகும்.
*வைகாசி மாதம் வளர்பிறை துவாதசியும், செவ்வாய்க்கிழமையும் கூடி வரும் நாளில் பாண்டு தீர்த்தத்தில் நீராடினால் இதற்கு முந்திய 21 முற்பி றவிகளில் செய்த பாவம் நீங்கி நல்வாழ்வு அமையும்.
*ஐப்பசி மாதத்தில் வளர்பிறை சப்தமியும், உத்திராட நட்சத்திரமும், ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வரும் நாளிலும், இதே மாதத்தில் வளர்பிறை துவாதசி திதியும், உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடி வரும் நாளிலும் பாபவிநாச தீர்த்தத்தில் நீராடினால் விருப்பங்கள் நிறைவேறும். வைகுண்ட பதவி கிடைக்கும்.
*தைப்பூசமும், பவுர்ணமியும் சேரும் நேரத்தில் கிருஷ்ண தீர்த்தத்தில் நீராடினால் இப்பிறவியிலும், மறுபிறவியிலும் சுகமான வாழ்வு அமையும்.
*மாசிமகமும், பவுர்ணமியும் கூடிவரும் நாளில் குமாரதாரை தீர்த்தத்தில் நீராடினால் ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்கும்.
*பங்குனி உத்திரமும், பவுர்ணமியும் கூடி வரும் சமயத்தில் தும்புரு தீர்த்தத்தில் நீராடினால் நினைத்தது நிறைவேறும். பரமபதம் சேரும் பாக்கியம் உண்டாகும்.