சிரகசன் என்னும் வேடனிடம், நரபலியாக தன்னையே கொடுக்க ஆதிசங்கரர் வாக்கு கொடுத்திருந்தார். ஒருநாள் நள்ளிரவில் வேடன் வந்தான். சங்கரரும் அவனுடன் புறப்பட்டார். அப்போது வேடனிடம், வாக்கு தவறாமையால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு மானின் கதையைக் கூறினார். காட்டில் ஆண்மான் ஒன்று வாழ்ந்தது. வேடன் ஒருவனிடம் சிக்கிக் கொண்ட அது, தன் மனைவியை பார்த்து விட்டு வரும் வரை காத்திருக்கும்படி வேண்டியது. வேடனும் அரை மனதோடு சம்மதம் தெரிவித்தான். புறப்பட்ட ஆண்மான் மாலை நேரத்தில் மீண்டும் வேடனிடம் வந்தது. இணைø யப் பிரிய விரும்பாத பெண் மானும், அதன் இரு மான் குட்டிகளும் உடன் வந்தன. தங்களின் உயிரை ஏற்குமாறு வேடனை வேண்டின. மான்களின் நேர்மை, அன்பு, வாக்கு தவறாமையைக் கண்ட வேடன் வருந்தினான். அப்போது சிவனே நேரில் தோன்றி மான்களுக்கு நட்சத்திர பதவி வழ ங்கினார். அவையே வானில் மிருகசீரிடம் என்னும் பெயரில் நட்சத்திரமாக ஜொலிக்கின்றன. மிருகசீரிடம் நட்சத்திரம், நான்கு நட்சத்திரங்களின் தொகுதியாகும்.