தலைவாசல்: தலைவாசல் அருகே, சித்தேரியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று நடந்த தேரோட்ட விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பல வித அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். தேரோட்டத்தை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாக்கள் வெட்டப்பட்டு, 6.30 மணியளவில் அம்மன் சிலை தேரில் அமர வைக்கப்பட்டது. சித்தேரி ஊராட்சியின் முக்கிய வீதிகளில் மேள தாளங்களுடன் வலம் வந்த அம்மனை பக்தர்கள் தரிசித்து அருள் பெற்றனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.