பதிவு செய்த நாள்
01
ஜூன்
2016
11:06
வடமதுரை: தைப்பூசம், பங்குனி உத்திர விழாக்களுக்காக, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகபட்டினம், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு செல்கின்றனர். இவர்கள் திருச்சி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வந்து, அய்யலுாரில் இருந்து எரியோடு சென்று, பின்னர்,வடமதுரை- ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலையில் பயணத்தை தொடர்கின்றனர். இந்த வழிகளில் அய்யலுார்- எரியோடு இடையே ஒத்தப்பட்டி- குரும்பபட்டி இடையே 4 கி.மீ., துாரம் மட்டுமே இன்னமும் ஒருவழி ரோடாக உள்ளது. மற்ற இடங்களில் 1.5 மீட்டர் அகல ரோடு கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள இந்த ரோட்டில் ஒற்றை வழியாக பாதையாக தார் ரோடு இருக்கும் 4 கி.மீ., துாரத்திற்குள் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. பக்தர்கள் பாதயாத்திரை நேரங்களில் விபத்து அபாயம் மேலும் அதிகரிக்கிறது. எனவே, மீதமுள்ள 4 கி.மீ., துாரத்தையும் அகலமாக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.