Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நான்காம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம் நான்காம் திருமுறையில் பாடிய பாடல் ...
முதல் பக்கம் » நான்காம் திருமறை
திருநாவுக்கரசு நாயனார் | தேவாரம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 செப்
2011
03:09

பன்னிரு திருமுறைகளில் 4, 5, 6ம் திருமுறைகள் திருநாவுக்கரசரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும்.

சைவ சமயம் தழைக்க தோன்றிய முக்கியமான சிவனடியார்களில் ஒருவர் திருநாவுக்கரசர். இவர் 7ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இவர் தற்போது கடலூர் மாவட்டத்திலுள்ள திருவாமூரில் புகழனார், மாதினியார் தம்பதியினருக்கு இரண்டாவது ஆண்குழந்தையாக அவதரித்தார் . இவரது இயற்பெயர் மருள்நீக்கியார். இவரது அக்காள் திலகவதியார்.  மருள் நீக்கியார் முற்பிறப்பில் வாகீச முனிவராக இருந்தார். திலகவதியாரும், மருள்நீக்கியாரும்  கல்வி கேளிவிகளில் மேம்பட்டு சகல கலா வல்லவர்களாக விளங்கினர். இவர்களது சிறுவயதிலேயே தந்தை புகழனாரும், தாய் மாதினியாரும்  விண்ணுலகை எய்தினார். பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய துக்கத்தைத் தாளமுடியாமல் திலகவதியாரும், மருள்நீக்கியாரும், பெருந்துயரத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் திலகவதியாருக்கு திருமணம் பேசி முடித்த கலிப்பகையாரும் போரில் உயிர் துறந்தார். கலிப்பகையாருக்கும் தனக்கும் திருமணமாகாவிட்டாலும் அவரை மனதில் கணவராக வரிந்துவிட்ட நிலையில் திலகவதியார் தானும் உயிர் துறக்க எண்ணினாள். அம்முடிவைக் கண்ட மருள்நீக்கியார் தமக்கையாரிடம், அருமைச் சகோதரி ! பெற்றோரும் நம்மைவிட்டு மறைந்த பின்னர், தங்களும் என்னை இந்த தரணியில் தனியே விட்டுச் செல்வதனால் நான் தங்களுக்கு முன்பே உயிர் துறப்பது திண்ணம் என்று கூறி அழுதார். இதனால் மனம் மாறினார் திலகவதியார். தமக்கையார் தமக்காக உயிர்வாழ்த் துணிந்தது கண்டு மருள்நீக்கியார் துயரத்தை ஒழித்து மனமகிழ்ச்சி பூண்டு, பற்பல தருமங்களைப் பாகுபாடின்றி வாரி வாரி வழங்கி வந்தார். இவருக்கு பற்றற்ற உலக வாழ்க்கைகய விட்டு விலகுவதற்காக வேண்டி சமண சமயமே சிறந்தது என்று கருதினார்.

சமண நூல்களைக் கற்றறிந்து வரும் பொருட்டு, அருகிலுள்ள பாடலிபுரத்திற்கு சென்று அங்குள்ள ஓர் சமணப் பள்ளியில் சேர்ந்தார்.இவரது  பெரும் புலமையைப் பாராட்டி மகிழ்ந்த சமணர்கள் அவருக்கு தருமசேனர் என்னும் சிறப்புப் பட்டத்தைக் கொடுத்து கவுரவித்தனர். மருள்நீக்கியார் சமண மதத்தில் பெற்ற புலமையின் வல்லமையால் ஒரு முறை பௌத்திர்களை வாதில் வென்று, சமண சமயத்தின் தலைமைப்பதவியையும் பெற்றார். இதற்கு  நேர்மாறாக அவரது தமக்கையாரான திலகவதியார் சைவ சமயத்தில் மிகுந்த பற்றுடையவராய் சிவநெறியைச் சார்ந்து ஒழுகலானாள். இவ்வாறு அம்மையார் சிவத்தொண்டு  புரிந்து வரும் நாளில் தன் தம்பி மருள்நீக்கியார் சமண சமயத்தில் புலமை பெற்று அச்சமயத்திலேயே மூழ்கி வாழ்கிறார் என்ற செய்தி கேட்டு,  சைவத்தில் சேரச் செய்ய முயற்சித்தாள். ஒருநாள் இறைவன் திலகவதியின் கனவிலே எழுந்தருளி, திலகவதி ! கலங்காதே !  அவனைக் சூலை நோயால் தடுத்தாட்கொள்வோம் என்றார். அதன்படி சூலை நோய் அவரது வயிற்றுள் புகுந்து அதனது உக்கிரத்தைத் தொடங்கியது.  சூலை நோயின் கொடிய துயரத்தைத் தாங்க முடியாத மருள்நீக்கியார் சோர்ந்து கீழே சாய்ந்தார். அவர் தாம் சமணச் சமயத்தில் பயின்ற மணி மந்திரங்களைப் பயன்படுத்தி, நோயினைத் தீர்க்க முயன்று, முடியாமல்,  சற்று நேரத்தில் மயக்கமுற்றார்.  இறுதியில், சமண குருமார்கள் தங்களால் இக்கொடிய நோயைத தீர்க்க முடியாது என்று தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டனர்.  மருள்நீக்கியார் வேறு வழியின்றி திருவதிகையில் உள்ள தன் தமக்கையாரிடம் செல்லத் தீர்மானித்து, சமையற்காரனை அழைத்து,  தமக்கு ஏற்பட்டுள்ள துயரத்தைப் பற்றித் திலகவதியாரிடம் சென்று அறிவிக்குமாறு சொல்லி அவனை அனுப்பி வைத்தார். சமையற்காரனும் பொழுது புலரும் தருணத்தில் திருவதிகையை வந்து அடைந்தான். சமையற்காரன் சொன்ன செய்தி அம்மையாருக்குத் தீயாகச் சுட்டது. தமக்கையார் விருப்பப்படி தமது பணியாளுடன் புறப்பட்டு திருவதிகையை அடைந்தார். மனவேதனையுடன் திலகவதியாரிடம் தமக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை பற்றிக் கூறினார்.

திலகவதியார் கண் கலங்க சகோதரா ! வருந்தாதே ! இச்சூலை நோய் உனக்கு ஏற்பட்டதற்குக் காரணம் எம்பெருமானின் அருளேயாகும். மீண்டும் உன்னை அவரது அடியாராக ஏற்றுக்கொள்வதற்காக இம்முறையில் உன்னை ஆட்கொண்டார். பற்றற்ற சிவனடியார்களை நினைத்து வழிபட்டுச் சிவத்தொண்டு புரிவாயாக! உன்னைப் பற்றிய மற்ற நோயும் அற்றுப்போகும் என்று கூறினாள். மருள்நீக்கியாருக்கு சமய மாற்றம் வேண்டித் திலகவதியார், திருவெண்ணீற்றினை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியவண்ணம் கொடுத்தாள். அம்மையார் அருளிக் கொடுத்த திருவெண்ணீற்றினைத் தாழ்ந்து பணிந்து பெற்றுக்கொண்ட மருள்நீக்கியார், எனக்குப் பற்றற்ற பெருவாழ்வு கிட்டிற்று. பரமனைப் பணிந்து மகிழும் திருவாழ்வு பெற்றேன் என்று கூறிக் திருவெண்ணீற்றை நெற்றியிலும் மேனி முழுவதும் தரித்துக் கொண்டார். திருவெண்ணீற்றின் மகிமையால் மருள்நீக்கியார் நோய் சற்று நீங்கப்பெற்ற நிலை கண்டார். அதுகண்டு அத்திருத்தொண்டர் மனம் குளிர்ந்தார். பெருவாழ்வு பெற்ற மருள்நீக்கியார் முன்போல் சைவராய்த் திகழ்ந்தார். அம்மையார் தம்பியாரை அழைத்துக்கொண்டு திருவலகும், திருமெழுகுத் தோண்டியும் எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வந்தாள். மருள்நீக்கியார், தமக்கையோடு கோயிலை வலம் வந்து, எம்பெருமான் திருமுன் வணங்கி நின்றார். சிவச்சன்னதியில் சைவப்பழமாக நின்று கொண்டிருந்தார் மருள்நீக்கியார் ! பேரொளிப் பிழம்பான எம்பெருமானின் திருவருள் அவர் மீது பொழிந்தது. தமிழ்ப் பாமாலை சாத்தும் உணர்வு அவருக்கு உதித்தது. உணர்ச்சி ஊற்றெடுத்துப் பெருகியது. மருள்நீக்கியார், தம்மைப் பற்றிக்கொண்டு படாத பாடுபடுத்திய சூலைநோயினையும், மாயையினையும் அறுத்திடும் பொருட்டு கூற்றாயினைவாயு விலக்கிலீர் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடினார்.பாடி முடித்ததும் அவரைப் பற்றிக் கொண்டிருந்த சூலை நோய் அறவே நீங்கியது.

ஐயனே ! அடியேன் உயிரையும், அருளையும் பெற்று உய்ந்தேன் என்று மனம் உருகக் கூறினார் மருள்நீக்கியார் ! அப்பொழுது விண்வழியே அசரீரி கேட்டது. இனிய செந்தமிழ்ப் பாக்களால் திருப்பதிகத் தொகையை பாடியருளிய தொண்டனே ! இனி நீ நாவுக்கரசு என்று நாமத்தால் ஏழுலகமும் ஏந்தப் பெறுவாய். மருள்நீக்கியார் திருநாவுக்கரசு என்னும் திருநாமத்தைப் பெற்றார். ஒருமுறை இவர் கைலாயத்தில் சிவனை தரிசிக்க திருக்கயிலாய மலைக்குப் புறப்பட்டார்.  கயிலை அரசரின் சிந்தையிலே உடல் தசைகள் கெட, உடம்பை உருட்டிக் கொண்டே சென்றார். அப்போது, ஓங்கு புகழ் நாவுக்கரசனே ! எழுந்திரு என்ற இறைவனின் அருள்வாக்கு ஒலித்தது. அப்பரடிகள், பூரித்தார்.  அன்ப! இப்பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் எழுந்திருப்பாயாக ! அங்கு திருக்கயிலையில் நாம் வீற்றிருக்கும் காட்சியைக் காட்டியருளுவேன் என்று மொழிந்தருளினார்.  அப்பரடிகளின் ஆசையை நிறைவேற்ற சிவன் கைலாயக்காட்சியை, திருவையாற்றில்  காட்டி அருளினார்.  இவ்வாறு பெருமானுக்கு அரும்பணி ஆற்றிவந்த அன்பு வடிவம் கொண்ட அப்பரடிகள் எம்பெருமானின் திருவடிகளில் தமது திருமெய் ஒடுங்கும் காலம் நெருங்கி வந்துவிட்டதே என்பதை தமது திருக்குறிப்பினால் உணர்ந்தார். அதனால். அவர் திருப்புகலூர் திருத்தலத்தை விட்டு சற்றும் நீங்காமல், பாமாலைப் பாடிப் பரமனை வழிபட்டு வந்தார். புடமிட்ட பொன்போல் உலகிற்கு பேரொளியாய்த் திகழ்ந்த திருநாவுக்கரசர் தாம் இறைவனது பொன்மலர் தாளினை அடையப் போகும் பேரின்ப நிலையை உணர்ந்தார். எண்ணுகேன் என் சொல்லி எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தை ஊன் உருக, உடல் உருக, உள்ளம் உருகப் பாடினார். எம்பெருமானின் சேவடியைப் பாமாலையால் பூஜித்து திருச்செவியைச் செந்தமிழால் குளிரச் செய்தார். திருநாவுக்கரசர் சித்திரைத் திங்கள்  சதயதிருநக்ஷத்திரத்தில், சிவானந்த ஞான வடிவேயாகிய சிவபெருமானுடைய பொன் மலர்ச் சேவடிக் கீழ் அமர்ந்தருளி பேரின்பப் பெருவாழ்வு பெற்றாறர்.

 
மேலும் நான்காம் திருமறை »
temple news
திருநாவுக்கரசர் பாடிய 4,5,6 திருமுறைகளில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளது. இதில் நான்காம் திருமுறையில் 1069 ... மேலும்
 
temple news
53. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்) திருச்சிற்றம்பலம் 508. குழல்வலம் கொண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar