நாசிக் : மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைகளில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் வசதிகள் செய்வதற்காக ஷீரடி சாய்பாபா சமஸ்தான் டிரஸ்ட் சார்பில் ரூ.50 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 24 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி மகாராஷ்டிர அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ரஞ்சித் பட்டில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்த டிரஸ்ட் சார்பில் மகாராஷ்டிர அரசின் அன்னதான திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.