பதிவு செய்த நாள்
03
ஜூன்
2016
11:06
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கம், காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு, நந்தீஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், தேன், இளநீர் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, மூலவர் காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் மற்றும் நந்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை ஓய்வுபெற்ற கரும்பு ஆய்வாளர் பொன்னுரங்கம், கோவில் தர்மகர்த்தாக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் மேகநாதன் செய்திருந்தனார். நிகழ்ச்சியில், புதுச்சேரியைச் சேர்ந்த மிரா அரவிந்த், பிரார்த்தனா கல்யாணி இருவ ரும், தேவார பாடல்கள் மற்றும் கர்நாடக இசைப் பாடல்கள் பாடினர்.