சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2016 12:06
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 6ல் கொடியேற்றத்துடன் துவங்கி 17 நாட்கள் நடக்கிறது.
முக்கிய திருவிழாவான பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தல் ஜூன் 14ல் நடக்கிறது. இரவு பூப்பல்லக்கு, மறுநாள் பூக்குழி திருவிழா நடக்கிறது. ஜூன் 21ல் தேரோட்டம், 22ல் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.