திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.
திருக்கோவிலுார்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நந்திகேஸ்வர பெருமானுக்கு 108 பால்குட அபிஷகம்‚ அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர்‚ நந்திகேஸ்வரருக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அலங்கார மண்டபத்தில் பிரதோஷ நாயகர் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, தீபாராதனை நடந்தது. சுவாமி புறப்பாடாகி சிவபுராணம்‚ நமச்சிவாய கோஷத்துடன் கோவிலை வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.