சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. சென்னை விமான நிலையத்தில் பரிவார மும்மூர்த்திகளுடன், ஸ்ரீ சக்தி சந்தியம்மன் கோவில் உள்ளது. அங்கு, நாளை, 8ம் தேதி காலை, 5:30 மணி முதல், 6:15 மணிக்குள் ரிஷப லக்னத்தில், கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. நேற்று மாலை, மஹா கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்கியது. இன்று மஹா கணபதி ஹோமமும், கும்பாபிஷேக தினமான நாளை, மூன்றாம் கால யாக பூஜையுடன், விமான கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.