நரிக்குடி: நரிக்குடி ஸ்ரீஅழகிய மீனாள் அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. முதல் நாளன்று திரு விளக்கு பூஜை ,மறுநாள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு கரகம் எடுத்து அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வர ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.