சொக்கநாதர் கோயில் ஆனி விழா துவக்கம் ஜூன் 18 ல் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2016 11:06
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்புரத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில், ஆனி பிரமோற்சவ விழா நேற்று காலை 11.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் மீனாட்சி மற்றும் சொக்கநாதர் தினமும் பல்வேறு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 18 அன்று மாலை 6 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வர். 11 ம் நாள்விழாவான ஜூன் 19 மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவில் தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படியாரின் சார்பாக விழா நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செய்கின்றனர்.